சம்பளம் அதிகமாக வேண்டும் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் நடிகை சமந்தா பேட்டி.!

SAMANTHA
SAMANTHA

பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தான் வழங்கப்பட்டு வருகிறது அவர்கள் வாங்கும் பாதி சம்பளம் கூட நடிகைகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வருகிறது அந்த நடிகை எந்த அளவிற்கு பிரபலமாக இருந்தாலும் கூட நடிகர்களுக்கு சமமாக நடிகைகளுக்கு சம்பளம் தராமல் இருந்த வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது பிரபல நடிகை சமந்தா ஹீரோவுக்கு சமமான சம்பளம் வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரிடமும் நான் கெஞ்ச மாட்டேன் என சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் திரைவுலகில் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரையிலும் ஹீரோவுக்கு நிகராக எந்த நடிகைக்கும் சம்பளம் தரவில்லை எனவே பாகுபாடு  இருந்து வருவதாக பல நடிகைகளும் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹீரோக்களுக்கு சமமான அளவிற்கு ஹீரோயின்கள் நடிக்கவில்லை என்றால் சமமான சம்பளம் கொடுக்க வேண்டாம்.

ஆனால் ஹீரோக்கள் அளவிற்கு தற்பொழுது அனைத்து நடிகைகளும் நடித்து வருகின்றனர் எனவே சமமான சம்பளம் தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள். இது குறித்து நடிகை சமந்தா ஹீரோ ஹீரோயின் ஆகிய இருவருக்கும் சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நானும் போராடுவேன் ஆனால் என் கடினமான உழைப்பை பார்த்து என்னுடைய படங்கள் அடையும் வெற்றியை பார்த்து உங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறோம் என்ற தயாரிப்பாளர்கள் சிலர் முன் வந்து அதிக சம்பளம் கொடுக்கின்றனர்.

ஆனால் நான் ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை எனக்கும் கொடுங்கள் என்று யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் சாகுந்தலம் படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்திற்காக நடிகை சமந்தா முழு வீட்டில் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.