தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக் கொண்ட நடிகை சமந்தா ஏராளமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
மேலும் இதனை அடுத்து தற்பொழுது இவர் விஜய் தேவர்கொண்டானுடன் இணைந்த குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இது தெலுங்கு திரைப்படமாகும். மேலும் சாகுந்தலம் திரைப்படம் பான் இந்திய படமாக உருவாகியிருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் பேட்டி ஒன்றில் பல வருடங்களுக்கு முன்பு ஹிந்தி சினிமா தான் டாப் என சொல்வார்கள் ஆனால் தற்பொழுது ஹிந்தியை விட தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள் அதிகம் சாதித்து வருகிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் முன்பெல்லாம் ஆடை வடிவமைப்பாளரிடம் இருந்து டிரஸ் வாங்குவதே கஷ்டமாக இருக்கும்.
ஏனென்றால் அந்த அளவிற்கு மிகவும் அசிங்கப்படுத்துவார்கள் அதாவது Who are you? South actor? What South? இப்படி எல்லாம் கேட்பார்கள் என சமந்தா கூறியிருக்கிறார். ஆனால் தற்பொழுது எல்லாம் இந்த மாறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு இந்த அளவிற்கு தென்னிந்திய நடிகைகளை அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்ற தகவலை முதன்முறையாக சமந்தா தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.