ஒன்றல்ல இரண்டல்ல பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் வைத்திருக்கும் நடிகை சமந்தா..! ஒவ்வொன்றும் இத்தனை கோடியா..?

samantha-3
samantha-3

தமிழ்மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா வை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக திருமணம் செய்துகொண்டால் நடிகைகள் திரைப்படத்தில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வார்கள் ஆனால்  சமந்தா அப்படி கிடையாது.

திருமணத்துக்கு பிறகுதான் திரைப்படங்கள் அதிகம் நடித்து வருவது மட்டுமல்லாமல் கிளாமரிலும் புகுந்து விளையாடி வருகிறார். இதன் விளைவாக தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல்வேறு சறுக்கல் ஏற்பட்டாலும் அவை எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தில்  கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மற்றொரு கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

பொதுவாக திரை உலகில் இருக்கும் பிரபலங்கள் பலரும் ஆடம்பரமான வாகனங்கள் வைத்துள்ளது வழக்கம் தான் அந்த வகையில் நடிகை சமந்தாவிடம் ஏராளமான வாகனங்கள் உள்ளன. இவ்வாறு அவர் வைத்திருக்கும் வாகனத்தின் விலை பல கோடியை  தாண்டும் என கூறப்படுகிறது.

samantha-4
samantha-4

Range Rover Vogue -2.26 கோடி, Mercedes Benz G63 AMG-2.3 கோடி, BMW 7 Series-1.34 கோடி, Porshe Cayman GTS-1.19 கோடி, Audi Q7-80 லட்சம், Jagur XF-70 லட்சம்.

அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா தன்னுடைய பெற்றோர்களை இழந்து ஏழு சகோதரிகள் உடன் ஆட்டோ ஓட்டி பிழைத்து வந்த பெண்ணுக்கு 1200000 மதிப்பான கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.