சின்மயின் புதிய கடையை திறந்து வைத்த நடிகை சமந்தா..! அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பா..!

samantha
samantha

தமிழ் திரை உலகில் பின்னணி பாடகியாக பல பாடல்களைப் பாடி பிரபலமானவர் பாடகி சின்மயி இவரை சர்ச்சைக்கு பெயர் போனவர் என்று கூட சொல்வார்கள் இவ்வாறு பிரபலமான நமது பாடகி தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்.  இவ்வாறு தொடங்கிய இந்த கடையை பிரபல நடிகை சமந்தா திறந்து வைத்துள்ளார்.

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் தற்போது நாகசைதன்யா விற்கும் சமந்தாவிற்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர்களுடைய திருமணம் தற்போது விவாகரத்தில் வந்து முடிந்து விட்டது. இந்நிலையில் மன அழுத்தத்தில் இருக்கும் நடிகை சமந்தா தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி  நடித்ததன் காரணமாக சமீபத்தில் நயன்தாரா பிறந்தநாளன்று சமந்தா அங்கு சென்றுள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க பாடகி சின்மயி spa ஒன்றை துவங்கியுள்ளார் அந்த வகையில் இந்த கடையை நடிகை சமந்தா நேரில் வந்து திறந்து கொடுத்தது மிகவும் வியக்கத்தக்க விஷயமாக அமைந்துள்ளது. மேலும் இது குறித்து நடிகை சமந்தா  சின்மயி பற்றி உன்னுடைய அனைத்து சாதனையையும் கொண்டாடுவதை நான் எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் உன்னுடைய இந்த பிசினஸ் ஆனது மிகவும் அருமையாக இருப்பது மட்டுமில்லாமல் மிகவும் நன்றாக வரும் என அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த spa வில் sculpting என்ற சிகிச்சை கூட ஹாலிவுட் தரத்தில் மிகவும் சிறப்பாக அமைத்து கொடுக்கப்படும்.

chinmayi-2
chinmayi-2

நடிகை சமந்தாவும் சின்மயியும் நெருங்கிய தோழிகள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் இந்நிலையில் இவருடைய துவக்க விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

chinmayi-1
chinmayi-1