காஜல் அகர்வாலுடன் ஒப்பிட்டு சமந்தாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! கடுப்பான சமந்தா..

samantha kajal
samantha kajal

தென்னிந்திய சினிமாவில் தனது விடா முயற்சியால் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர் தான் நடிகை சமந்தா  தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கிவுள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர்களுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது இதனை பார்த்ததும் தெரிந்தது சமந்தா கிளாமர் காட்டிவுள்ளார் என்று.

அதோடு மட்டுமல்லாமல் டபுள் மீனிங் வசனம் பேசியிருக்கிறார்.  ஏற்கனவே சமந்தா பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் நிலையில் இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த சில காட்சிகள் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. மேலும் இவர் தெலுங்கில் சகுந்தலம், யசோதா  போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

விவாகரத்திற்கு பிறகு சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பல புகைப்படங்களையும் கருத்துகளையும் தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை தொடர்ந்து தூண்டி வருகிறார்.  அப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் சமந்தாவை நடிகை காஜல் அகர்வாலுடன் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளனர்.

அதாவது நடிகை காஜல்அகர்வால் தொழிலதிபர் அரவிந்த் கிச்சிலு என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க வந்த காஜல் அகர்வால் சில மாதங்களிலேயே கர்ப்பமானார் எனவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்த இவருக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

எனவே ரசிகர்கள் என்னதான் காஜல் அகர்வால் பெரிய நடிகையாக இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பெண்ணாக முக்கியத்துவம் தந்து வருகிறார்.  அதனாலதான் குடும்பம் குழந்தைகள் என்று பெண்ணாகவே மாறி இருக்கிறார் ஆனால் சமந்தா அப்படி இல்லாமல் திருமணத்திற்குப் பிறகு கிளாமராக நடித்தால் தான் இவருக்கு விவாகரத்து ஆனதாகவும் கூறி சமந்தாவை கடுப்பேத்துவது போல் பதிவிட்டு உள்ளார்கள்.

பிறகு சமந்தா என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது அதை மீறுபவர்களை நான் சும்மா விட மட்டேன் என்று ரசிகர்களை எச்சரித்தது போல் பதிவிட்டுள்ளார். எனவே அவர்  பதிவிட்டுள்ள தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.