சமந்தா என்ற பெயரை தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்,டோலிவுட், கோலிவுட் எங்கிலும் மிகப் பிரபலமான நடிகை. தமிழ் சினிமாவில் பானாகாத்தாடி மற்றும் கத்தி படத்தின் மூலம் பெரும்பான்மையான மக்களால் அறியப்பட்ட ஒரு நடிகை தான் இவர், கத்தி படத்திற்குப் பின்பு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.
அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் தற்போது சர்வதேச படமான “அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்” எனும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்,இவருடைய தற்போது சம்பளம் பல கோடிகள், இவர் நாகா அர்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவை திருமணம் செய்து தற்போது சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டார்.
அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்தார் அதில் புஷ்பா திரைப்படத்தில் “ஊ சொல்றியா மாமா” பாடல் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இந்தப் பாடலில் இவரது நடனம் பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தாலும் சில ரசிகர்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்பிறகு மேலும் தற்பொழுது தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த காற்றுவாக்கில் 2 காதல் என்னும் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படி எல்லாம் இருக்க சமந்தாவிடம் உங்களது முதல் சம்பளம் எவ்வளவு என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சமந்தா, “நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு ஹோட்டலில் வரவேற்பாளர் ஆக 8 மணி நேரம் வேலை செய்தேன் அதற்கு 500 ரூபாய் சம்பளம் கிடைத்தது அது தான் என்னுடைய முதல் சம்பளம்” என்று கூறியுள்ளார், இதைக்கேட்ட பல ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.