அந்த வலியில் இருந்து வெளிவர ஆறு மாதமானது.. சமந்தா ஓபன் டாக்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் சமந்தா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் பானாக்காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமடைந்தார் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சுமார் 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றவர்கள். இவர்களின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் விவாகரத்திற்கு பிறகு மன உளைச்சலுக்கு ஆளான இவர் அதிலிருந்து வெளிவர வேண்டும் என தொடர்ந்து தனது கவனத்தை திரைப்படம் நடிப்பதை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்தப் பாடலுக்கு மட்டும் 5 லட்சம் சம்பளமாக பெற்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து தற்போது இவர் சகுந்தலம் மற்றும் காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ்சாக இருக்கிறது. இவ்வாறு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அதில் ஒரு ரசிகர் காது குத்திய இடம் எப்படி சரியானது என கேட்டிருந்தார் அதற்கு காதுகுத்து நேரத்தை காட்டி சரியாக ஆறு மாதங்கள் ஆனது, என் செய்வேன் என இருக்கிறது. இன்னும் சரியாக நீண்ட காலம் ஆகும் என கூறியிருந்தார்.

மற்றொருவர் டாட்டூ பற்றி கேட்டதற்கு எப்போதும் டாட்டு போடாதீங்க என்றுதான் அட்வைஸ் கூறுவேன்.. என்று தெரிவித்திருந்தார்.