தற்போதெல்லாம் திருமண விவாகரத்து என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் முக்கியமாக சினிமாவில் திருமணம் செய்துகொண்ட ஏராளமானோர் முதல் திருமணத்தில் இருந்து பிரிந்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் அந்தவகையில் நடிகர்களை விடவும் நடிகைகள் தான் அதிக அளவில் திருமணபந்தத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.
அதோடு நடிகர்களின் வாழ்வில் நடந்ததை விடவும் நடிகைகளின் வாழ்வில் இவ்வாறு நடந்தால் அதனை மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி விடுகிறது. அந்த வகையில் தற்போது நடிகை சமந்தாவின் விவாகரத்து பெரிய அளவில் பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான வதந்திகளும் ஏற்பட்டு வருவதால் சமந்தா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம்.
சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சரியான காரணம் தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் இந்த காரணத்திற்காக தான் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள் என்ற பல வதந்திகளை பரப்பி வருவதால் சமந்தா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம்.
சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருவதால் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது இதன் காரணமாக என் மீது அக்கறை காட்டும் அனைவருக்கும் நன்றி அதேநேரத்தில் உண்மைக்கு மாறான பொய்யான கட்டுக்கதைகள் பரவி வருகிறது.
அதில் எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற்று தர மறுத்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி மற்றும் கருவை கலைத்தேன் என பல வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய திருமண பிரிவு எனக்கு மிகுந்த வலியை அளித்துள்ளது அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு அவகாசம் கண்டிப்பாக வேண்டும் அதிலிருந்து மீள்வேனே தவிர ஒருபோதும் நான் உடைந்து விட மாட்டேன் என மிகவும் வேதனையுடன் பதிலளித்துள்ளார்.
இதனை பார்த்த ஏராளமான ரசிகர்கள் ஒருவரின் சொந்த வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிடுவது தவறான ஒன்று தேவை இல்லாத கருத்துகளையும் பேசி சம்பந்தப்பட்டவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று கூறிவருகிறார்கள்.