தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இதுவரையிலும் பெரிதாக எந்த சர்ச்சையிலும் மாட்டாமல் இருந்து வந்தார்.ஆனால்,இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெப் சீரியலின் மூலம் பல பிரச்சனைகளை சந்தித்தார்.
அதோடு சமந்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் கவச்சியான புகைப்படங்கள் வெளிய்டுவது மற்றும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் இவரை தொடர்ந்து நடிகை நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்கள்.பொதுவாக ரசிகர்கள் ஒரே திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்து நடித்து வருவதால் ரசிகர்கள் பெரிதும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.அதோடு இத்திரைப்படதிற்க்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.
எனவே ரசிகர்கள் நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சமந்தாவிடம் கேட்டுள்ளார்கள். அதோடு இவர்களின் நடிப்பைப் பற்றியும் கேட்டுள்ளனர். அதற்கு சமந்தா நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஒரு சிறந்த நடிகர், நடிகைகள்.
எனவே எப்பொழுது போலவும் இவர்களின் சிறந்த நடிப்பை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள். நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஒரு நல்ல உறவை பகிர்ந்து கொள்வதாகவும் சமந்தா கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.