எனக்கு இந்த நடிகருடன் தான் ரொமான்ஸ் செய்ய ஆசை.! சமந்தா அதிரடி.! அப்போ கணவர்

samantha 7

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு திரையுலகில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.

அந்தவகையில் தமிழில் தொடர்ந்த பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்யுடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இவர் பெரிதாக தமிழில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது த ஃபேமிலி மேன் 2 வெப் சீரியலில் பயங்கரவாதி மகளாக நடித்துள்ளார். ஆனால் இந்த வெப் சீரியல் வெளி வரக்கூடாது என்று பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக நடிகைகள் என்றால் திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் ஒரு சில நடிகைகள் திரைப்படங்களில் பெரிதாக நடிக்க மாட்டார்கள் ஒரு சிலர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவார்கள் ஆனால் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து கவர்ச்சியிலும் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா.

samantha 6
samantha 6

அந்த வகையில் திரைப்படங்களிலும் ரொமான்ஸ் காட்சிகளிலும் அதிகமாக நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்  ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் சமந்தாவிடம் ஒரு ரசிகர் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் யாருடன் நடிக்க ஆசை என்று கேட்டதற்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் என்று கூறியுள்ளார் சமந்தா.  இவரும் பதிலளித்த சமந்தாவிடம் நாக சைதன்யாவின் நிலைமை என்ன ஆகப் போகிறதோ என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.