மிகப்பெரிய கம்பேனியை நம்பி 50 கோடி நஷ்டத்தை சந்தித்த நடிகை சமந்தா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

samantha 2
samantha 2

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தொடர்ந்து ஏராளமான நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை சமந்தா.  இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான முதல் படமான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவரின் நடிப்புத் திறமை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தால் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் 2017ஆம் ஆண்டு சமந்தாவுக்கு நாக சைதன்யாவுடன் திருமணம் ஆனது மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமண பந்தம் கடந்த ஆண்டு  முடிந்தது.

இவர்கள் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா சோர்ந்து விடாமல் திரைப்படங்களில் பிஸியாக நடிப்பதை தொடர்ந்தார். அந்த வகையில் சில திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார் விரைவில் அந்த திரைப்படங்களும் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அப்படி ஒரு திரைப்படம் தான் சகுந்தலம் இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  சமீபத்தில் தான் நடித்து முடித்திருந்தார். நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் செய்யாமல் தொடர்ந்து பல பிஸ்னஸ்களை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது புதிய startup company கொன்றால் ரூபாய் 5 கோடி வரை அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.இந்த தகவல் வெறும் வதந்தியா அல்ல உண்மையா என்று சரியாக தெரியவில்லை ஆனால் சமந்தா இதனைப் பற்றி எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.