தென்னிந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தன்னுடைய சினிமா கெரியேரில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் பல படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை கைவசம் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளாரோ அதேபோல தெலுங்கு சினிமாவிலும் இவர் ஒரு முன்னணி நடிகை. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
இவ்வாறு தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வரும் இவர் நடிப்பில் தற்பொழுது யசோதா மற்றும் சகுந்தலமாகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது மேலும் இத்திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவர் தற்பொழுது பாலிவுட்டிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது சமந்தா காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் அவப்பொழுது சமந்தா தனது திருமண வாழ்க்கை பற்றி பேசும் ப்ரோமோ ஒன்றை வெளியாகி இருக்கிறது. மேலும் சமந்தா அந்த நிகழ்ச்சியில் அக்ஷய் குமாருடன் கலந்து கொண்டுள்ளார்.
அந்த வகையில் அக்ஷய்குமாருடன் இணைந்து தான் சமந்தா நடிக்க இருக்கிறார். இவர்கள் இணைந்து நடிக்க இருக்கும் திரைப்படத்தினை கரன் ஜோக்கர் என்பவர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் காப்பி வித் கரண்ட் ஷோவில் இந்த திரைப்படத்தினைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.