தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து சினிமாவிற்கு அறிமுகமான சில கால கட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.
இவர் விஜய், விஜய் சேதுபதி, தனுஷ் என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மாறி மாறி நடித்து சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
இவரின் திரை வாழ்க்கை மிகவும் நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் 2007ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணமாகி நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிறகு மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா தற்போது அதிலிருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் அதிக ஆர்வம் உடையவராக திகழ்கிறார். அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இருந்தாலும் இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியவர்களுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்திலும் கவர்ச்சியான ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்த நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது.
பிறகு யசோதா படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டானுடன் இணைந்து நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.