நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் மிகவும் பிரபலமானவர். இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவ்வாறு மிகவும் பிஸியாக இருந்து வரும் இவர் சமீபத்தில்தான் சமந்தா தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தார். அதன் பிறகு புஷ்பா என்னும் படத்தில் இவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தையும் சில ரசிகர்களிடையே வெறுப்பையும் ஏற்படுத்தியது.
மேலும் பேமிலி மேன் 2 தொடரில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் சிறப்பான வரவேற்பைப் பெற்றார். தற்பொழுது யசோதா என்னும் படத்தில் நடித்து வருகிறார் இப்படம் ஆக்ஷன் த்ரில்லராக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். என்னதான் ஆக்ஷன் திரில்லராக இருந்தாலும் படத்தில் ரொமான்ஸ் இல்லாமல் இருக்காது என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமந்தாவை அதிக வேடங்களில் நாம் பார்த்துள்ளோம் முதன்முதலில் இப்படத்தில்தான் ஆக்ஷன் ஹீரோயினாக பார்க்கப் போகிறோம் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது படக்குழு கொடைக்கானலில் படம் எடுப்பதற்காக செட் அமைத்துள்ளனர். இப்படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் சமேஷ், முரளி சர்மா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் அல்லாமல், ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரை களமிறங்கியுள்ளனர் இது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.மே மாதம் படம் நிறைவடைய உள்ள நிலையில் படக்குழு படத்தை வெளியிடும் தேதியையும் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள படம் வரும் ஆகஸ்ட் 12 ல் வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.