தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் சாதித்தது மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிற்கு மருமகளாகவும் வாக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் நடிகை சமந்தா பிரபல முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு இவர்களுடைய திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் பல மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சமந்தா நடித்த வெப் தொடர் தான். அந்த வகையில் நடிகை சமந்தா இந்த தொடரில் மிக மோசமான காட்சிகளில் நடித்ததுமட்டுமில்லாமல் கவர்ச்சியில் எல்லை மீறி நடித்துள்ளார் இதன் காரணமாக தன்னுடைய கணவரின் குடும்பத்தார்கள் இதுபோன்ற கதாபாத்திரத்தில் இனி நடிக்க கூடாது என கண்டித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது வீட்டை விட்டு வெளியே சென்று தன்னுடைய தோழி வீட்டில் தங்கி வருகிறாராம் நடிகை சமந்தா. அந்த வகையில் தற்போது நாகசைதன்யா நடித்த லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது அந்த வகையில் பேட்டியாளர்கள் நாக சைதன்யாவுடன் பேட்டி எடுத்துள்ளார்கள் அப்போது சமந்தாவைப் பற்றி எந்த ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என முன்பாகவே அவர் கூறி விட்டாராம்.
இவ்வாறு அவர் கூறியது போல் பத்திரிக்கையாளர்களும் எந்த ஒரு கேள்வியும் கேட்க வில்லையாம் அதுமட்டுமில்லாமல் சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கணவர் குடும்பத்தாரின் பெயரை நீக்கி உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாகிவிட்டது.
இவ்வாறு இருவர்களும் பேசாமல் இருப்பதை பார்த்தால் இருவருக்கும் விவாகரத்து கண்டிப்பாக நடக்கும் என பத்திரிகையாளர்கள் முடிவு செய்து விட்டார்கள். இந்நிலையில் இரு வீட்டார்களும் இவர்களை ஒன்று சேர அயராது போராடி வருகிறார்கள் ஆனால் இவர்கள் இருவரும் வெளிப்படையாக பேசிக் கொண்டால் மட்டும் தான் இவர்களின் விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.