ஆழம் தெரியாமல் காலை விட்ட நடிகை சமந்தா..! இனிமேல் இவங்க கரையை கடக்கிறது கஷ்டம்தான் போல..!

Actress Samantha left in the morning without knowing the depth: தற்போது சினிமாவில் கதை விசித்திரமாக இருக்கிறது என்ற காரணத்தினால் அதன் பின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை கொஞ்சம் கூட சிந்திக்காமல் நடிகர்களும் நடிகைகளும் திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதன் விளைவாக பின்னர் பல்வேறு பிரச்சினைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கி கொள்கிறார்கள் அந்த வகைகள் சமந்தா சமீபத்தில் நடித்து வரும் தி பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரானது ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த வெப்ப தொடரானது நாளை அமேசான் ப்ரைம் டைமில் மிக பிரம்மாண்டமாக வெளிவர போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் இலங்கை தமிழர்களின் ltte யை மிக தவறாக காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் இந்த  தொடரின் டிரைலர் வெளிவந்துள்ளது அந்த டிரைலரில் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கும் இலங்கை  தமிழர்களுக்கும் தொடர்பு உள்ளது போல் வார்த்தைகள்  இடம்பெற்றிருந்தன இதன் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு தமிழர்களும் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இதன் காரணமாக நடிகை சமந்தாவை பல்வேறு தரப்பினரும் வெறுத்து வந்த நிலையில் பலரும் இவர் மீது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வெப் தொடரானது திரையில் வெளிவரவே கூடாது எனவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு வந்துகொண்டே இருக்கிறது இன்நிலையில் நாளை இந்த வெப்பநிலையானது இணையத்தில் வெளியாகவுள்ளது அதுமட்டுமில்லாமல் இதில் ஒன்பது சீரியஸ் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழர்கள் பலரும் சமந்தாவின் இந்த தொடரை மட்டும் கிடையாது அவர் நடிக்கும் எந்த ஒரு திரைப்படத்தையும் இனிமேல் பார்க்க கூடாது என கூறியுள்ளார்கள்.  போகிற போக்கை பார்த்தால் இந்த பிரச்சினைகளிலிருந்து சமந்தா மீண்டு வருவது ஒரு மாபெரும் சவாலாக தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.

samantha
samantha