தமிழ்மொழி மட்டும் அல்லாமல் தெலுங்கிளும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தெலுங்கில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஜானகி இத்திரைப்படம் தமிழில் 96 படத்தின் ரீமேக் ஆகும்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் போது பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இவ்வாறு தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் குடும்பத்தில் குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை தன்னுடைய பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டார்.
இவ்வாறு குடும்பத்துடன் ஒட்டி உறவாடி இருந்த நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த குடும்ப பெயரை நீக்கி உள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா கொஞ்ச நாட்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கப் போவதாக கூறி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் விவாகரத்து சம்பந்தப்படுத்தி பல்வேறு செய்திகள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் தெலுங்கு மீடியா பக்கங்களிலும் பெரிய குடும்பத்து மருமகளான நடிகை சமந்தா விவாகரத்து பெற போவதாக கூறிவருகிறார்கள்.
ஆனால் நடிகை சமந்தா தன்னுடைய பெயரை மாற்றியது தான் நடிக்கப்போகும் சகுந்தளம் என்ற திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தான் அப்படி மாற்றினார் என கூறப்படுகிறது. அந்த வகையில் சமந்தாவிடம் அவருடைய விவாகரத்து பற்றி கேட்கும்போது நான் எப்பொழுது சொல்ல தோன்றுகிறதோ அப்பொழுது சொல்வேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இதை பற்றி இனிமேல் பேச வேண்டாம். என்று கூறியுள்ளாராம் மேலும் சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்டு காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.