பிரபல நடிகர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா..! இணையத்தில் வெளிவந்த ப்ரோமோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

samantha-001
samantha-001

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கில் பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு இவர்களுடைய திருமணம் சந்தோஷமும் பாசமும் நிறைந்த நிலையில் தற்போது விவாகரத்தில் முடிவடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இவர்களின் விவாகரத்திற்கு காரணம் என்னவென்று தெரியாத நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் பல வதந்திகள் வெளியாகி வருகிறது.

மேலும் சமந்தாவிற்கு இந்த விவகாரத்தில் இஷ்டம் இல்லாதது போல் ஒரு இயக்குனர் கூரியிருந்தார் அந்தவகையில் அவர் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பை கூட விரைவில் முடித்துவிட்டு நான் நாக சைதன்யாவுடன் தன்னுடைய இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்க போவதாக கூறி இருந்தாராம்.

இந்நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில் தன்னை பற்றிய தவறான செய்திகள் என்னை ஒரு விதத்திலும் பாதிக்காது என சமந்தா தெரிவித்துள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க நடிகை சமந்தா சமீபத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ள ப்ரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.