பல மடங்கு சம்பளத்தை உயர்த்த ரெடியாக இருக்கும் நடிகை சமந்தா.! இந்த படம் வெற்றி அடைந்தால் மட்டுமே அதை செய்வாராம்.?

samanatha
samanatha

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் ஜோடி போட்டு வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வரவேற்பு அதிகரித்தது இதனால் தற்போது தென்னிந்திய திரை உலகில் கவனிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக சமந்தா இருக்கிறார்.

திருமணமான பிறகு சமந்தாவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை சிறப்பான படங்களை ஒரு பக்கம் தேர்ந்தெடுத்தது நடித்தாலும் மறுபக்கம் வெப் சீரிஸ் மற்றும் உடல் எடையை குறைத்து சிக்ஸ்பேக் வைத்துள்ளார் மேலும் அதற்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்து தனது கவர்ச்சியையும் காட்டத் தொடங்கியுள்ளார். இதனால் நடிகை சமந்தாவை பின்பற்றுவோரின் எண்ணிக்கை தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் சேர்ந்து  விஜய் சேதுபதி மற்றும் தென் இந்திய திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக வலம்வரும் நயன்தாராவும் நடிப்பதால் படத்தை வேற லெவலில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மக்கள் மற்றும் ரசிகர்கள்.

இந்த படம் எப்போது வரும் என காத்திருந்த நிலையில் வரும் செப்டம்பர் 10ம் தேதி இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சம்பளத்தை உயர்த்தி நடிக்கும் சமந்தா தற்போது காத்து வாக்குல இரண்டு காதல் படத்தின் வெற்றியை பொறுத்தே தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்த ரெடியாக இருக்கிறாராம்.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தொடர்ந்து 5 இயக்குனர்களிடம் கதையை கேட்டு உள்ளார் ஆனால் அவர் அடுத்து நடிக்கப்போகும் படத்திற்கு இன்னும் சம்பளம் பேசவில்லையாம். விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியைப் பொறுத்தே தனது சம்பளத்தை உயர்த்த கூறுவரா அல்லது அதே சம்பளத்தில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.