முதல் முறையாக பேய் வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா.? எந்த படத்தில் தெரியுமா.?

samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றியை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

தற்பொழுது நடிகை சமந்தா தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்த வெற்றி கண்டுள்ளார். அது மட்டுமில்லாமல் சோலோ படங்களிலும் நடிக்கிறார். இப்போ இவர் தமிழை தாண்டி பிற மொழிகளிலும் நல்ல கவனம் செலுத்து வருகிறார் இதனால் அவரது மார்க்கெட் அதிகரித்துள்ளது.

சமந்தா ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஐட்டம் டான்ஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார் இதனால் இவர்கான ரசிகர்கள் பட்டாலும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இந்த நிலையில் நடிகை சமந்தா பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில்  சகுந்தலம், யசோதா போன்ற படங்கள் திரைப்படங்கள் இருக்கின்றன இந்த படங்கள் ஒவ்வொன்றும் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நடிகை சமந்தா பாலிவுட் படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் அந்த படத்தில் நடிகை சமந்தா இளவரசியாகவும், பேயாகவும் நடிகைய இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வித்தியாசமான ரோலில் நடிகை சமந்தா நடிக்க இருப்பதால் ரசிகர்கள் அதை காண பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

குறிப்பாக பேய் கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பு எப்படி இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.