ஸ்டைலிஷ் ஹீரோ திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட போகும் நடிகை சமந்தா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

samantha-02

தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டு தன்னுடைய திருமண வாழ்க்கையை மிகவும் சிறப்பாக செலவழித்து வந்தார்.

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு திரைப்படத்தில் நடிப்பதை தவிர்ப்பது மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கு துளிகூட இடம் கொடுக்க மாட்டார்கள் ஆனால் நடிகை சமந்தா திருமணத்திற்குப் பிறகுதான் அனைத்திலும் தாராளம் காட்ட ஆரம்பித்தார் ஆனால் இதுவே அவருடைய வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளியாக அமைந்துவிட்டது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை சமந்தா பல திரைப்படங்களில் கமிட்டாகி வருவது மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.  இந்நிலையில் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட போவதாக ஒரு செய்தி அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

samantha -02
samantha -02

அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் ஸ்டைலிஷ் நடிகராக வலம் வருபவர் தான் அல்லு அர்ஜுன் இவர் தற்போது புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஏற்கனவே ஒரு பாகம் வெளிவந்த தற்போது இரண்டாவது பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதன் காரணமாக அவருக்கு தகுந்தார்போல் வில்லனாக நடிகர் பகத் பாஸில் நடித்து வருகிறார்.

samantha -01

இவ்வாறு உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன பொதுவாக நடிகை சமந்தா எந்தவொரு திரைப்படத்திலும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியது கிடையாது அந்த வகையில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தற்போது நடனம் ஆடுவது காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல் சமந்தா இந்த ஒரு பாடலுக்கு மட்டும் 1.5 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.