சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் எப்பொழுதுமே டாப் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது வழக்கம் அதன் மூலம் அவரது சினிமா பயணமும் அசுர வளர்ச்சியை எட்டுவது மட்டுமல்லாமல் சம்பளத்தையும் அதிகமாக கேட்க முடியும் அந்த வகையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவைத் தொடர்ந்து நடிகை சமந்தா.
தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து அசத்தி வருகிறார் இப்பொழுது கூட நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் சமந்தா நடித்துள்ளார் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பாக சமந்தா சூப்பர் டிலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதுதான் நமக்கு தெரியும் ஆனால் இந்தப் படத்திற்கு முன்பு விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க மறுத்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சூது கவ்வும் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி விஜய் சேதுபதியை வைத்து உருவாக்கிய திரைப்படம்தான் காதலும் கடந்து போகும்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதலில் நடிக்க பட குழு தேர்வு செய்தது சமந்தாவை தான் ஆனால் அப்போது சமந்தா சில காரணங்களால் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார். அப்பொழுது விஜய் சேதுபதி வளர்ந்து வரும் ஹீரோவாகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காரணத்தினால் விட்டாரோ என்னவோ என தெரிய வில்லை பின் காதலும் கடந்து போகும் படத்தில் சமந்தாவுக்கு பதிலாக மடோனா செபஸ்டியனை நடிக்க வைத்தனர். ஆனால் இந்தப்படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டோமே என புலம்பி உள்ளாராம் சமந்தா அதன்பின் விஜய் சேதுபதி பட வாய்ப்பு வந்தால் குறிப்பாக தட்டி தூக்குகிறார்.