நடிகை சமந்தா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் தமிழ்மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக யசோதா, சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல், குஷி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபடியே உள்ளது. இவர் மயோசிட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டதால் இவரால் ஒரே இடத்தில் சிறிது நேரத்திற்கு மேல் நிற்க முடியாது. அதனால் இவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
அதனாலேயே இவருக்கு வரும் பட வாய்ப்பினை தவிர்த்து வருகிறார். இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தினை பதிவிட்டு வருவார். இதனை பார்த்த ரசிகர்கள் முழுமையாக உடல் நலம் தேடி வர வேண்டும் என கமெண்டினை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இவருக்கு 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாகசதன்யாவுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர். எனவே அதனை தொடர்ந்து தற்போது இவர் தனித்து வாழ்ந்து இருக்கிறார். அதன் பின்னர் இவர் மனம் உடைந்து போகாமல் மீண்டும் தொடர்ந்து திரை துறையில் சாதித்து வருகிறார்.
பிரசாந்தின் திருடா திருடா படத்தில் நடித்த சந்திரலேகாவா இது?. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..
அந்த வகையில் இவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதையும் தற்போது இவர் புறக்கணித்து உள்ளார். இப்படி சினிமாவில் ஆல் ரவுண்டராக வலம் வரும் இவர் தனது மண வாழ்க்கையில் தோல்வியுற்றதனால் மனமுடைந்த அவரது குடும்பத்தினர் சமந்தாவை தனது உறவுக்கார பையனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சொல்லி அழுத்தம் கொடுப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையா பொய்யா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.