சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று இருக்கும் நடிகைகள் பலரும் என்னதான் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி அசத்தினாலும் அதிகபட்சமாக அவர்கள் வாங்கும் சம்பளம் 4 அல்லது 5 கோடியாக தான் இருக்கும் ஆனால் சினிமா உலகில் ஐட்டம் டான்ஸ் ஆடும் நடிகைகள் ஒரு பாடலுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது.
டாப் நடிகைகளையே ஆச்சரியப்பட வைக்கிறது அந்த வகையில் ஹிந்தியில் ஐட்டம் டான்ஸ் களுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். முதலில் இவர் அந்த மாதிரி படங்களில் நடித்து இருந்தாலும் போகப்போக சினிமாவில் காலடி எடுத்து வைத்த பின் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு சற்று கவர்ச்சியான அளவை குறைத்து பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.
தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓ மை கோஸ்ட் மற்றும் ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படி இருந்தாலும் அவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட சுமார் இரண்டு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக தெரியவந்துள்ளது இவரைப்போலவே தற்போது டாப் நடிகைகள் கூட..
குத்து பாடல் மட்டும் அயிட்டம் டான்ஸ் களுக்கு ஆடி காசுகளை நன்றாகவே பார்க்கின்றனர் அந்த வகையில் நடிகை சமந்தாவும் இறங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் ஒரு பாடலுக்கு ஆட சமந்தாவை ஆட வைக்க புஷ்பா படக்குழு முடிவு எடுத்தது ஒருவழியாக சமந்தா ஆடியும் முடித்துள்ளார்.
அந்த ஒரு பாடலுக்காக அவர் 1.5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் தற்போது சன்னி லியோன் வழியை நடிகை சமந்தா பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.