தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் நடிகை சமந்தா சினிமா உலகில் வெற்றி கொடியை நாட்டினாளும் நிஜ வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்து உள்ளாராம்.
இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை விவாகரத்துச் செய்த பின் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கிறார். சமந்தா கையில் இப்பொழுது கூட பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் தெலுங்கில் இவர் சகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அல்லி அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகி இருந்ததாக படக்குழு அறிவித்தது. தற்போது அந்த படத்தில் சிறப்பாக ஆடி அசத்தி உள்ளார் என்ற தகவலும் வெளியே கசிந்து வருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா அந்த ஐட்டம் பாடலுக்கு ஆடியதற்கு மட்டுமே சுமார் பல கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன இது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. நடிகை சமந்தா புஷ்பா படத்தில் நடனமாடியதற்காக சுமார் 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அவரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வேறு வழி இல்லாமல் சமந்தா தனது சம்பளத்தை உயர்த்த தான் போகிறார் என்று சமீபத்திய தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அது இந்த பாடலிலேயே தெரிந்து விட்டது எனக் கூறி வருகின்றனர்.