இயக்குனர் பேச ஆரம்பித்தவுடன் மேடையில் கதறி கதறி அழுத நடிகை சமந்தா.! என்ன கூறியுள்ளார் பாருங்க..

samantha-1
samantha-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தற்பொழுது தொடர்ந்த அடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியானது.

இந்த படத்தில் இவருடைய கேரக்டர் பெரிதளவிலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது மேலும் விஜய் தேவர் கொண்டனுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது நடிகை சமந்தா சாகுந்தாலும் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா சகுந்தலம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவரை அடுத்து தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தினை குணா டிம் ஒர்க்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நீலிமாகுணா தயாரித்துள்ளார். தெலுங்கில் உருவாகி உள்ள இந்த படத்தினை வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜ் அவர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடும் நிலையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது எனவே இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சமந்தா பற்றி இயக்குனர் பேசிய தொடங்கியவுடன் சமந்தா மிகவும் எமோஷனலாக அழத் தொடங்கிவிட்டார் அவரால் அந்த அழுகையை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை பிறகு பேசிய சமந்தா இப்படி ஒரு நாளுக்காக தான் காத்திருந்தேன்.

சகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கடினமாக உழைத்தேன் அதாவது பேசும்போது, அழுகும் பொழுது, ஓடும் போது அந்த கதாபாத்திரத்திலேயே இருக்க வேண்டும். இதற்காக நான் கிளாஸ் போய் கற்றுக் கொண்டேன் என்னுடைய வாழ்க்கையில் சகுந்தலம் கேரக்டர் மிகவும் முக்கியமான ஒன்று என கூறியுள்ளார் இவ்வாறு இந்நிகழ்ச்சியில் சமந்தா பல பிரச்சனைகளை சந்தித்ததனாலும் அவருக்கு தற்பொழுது மெயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் தான் இவ்வாறு அழுதிருக்கிறார் என்பது தெரிய வருகிறது