தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் இவரின் நடிப்பு திறமை மற்றும் இவரின் தனி ஸ்டைல் போன்றவற்றால் சினிமாவில் பிரபலமடைந்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த பிறகு இவருக்கு என்று பல ரசிகர்கள் உருவாக்கினார்கள். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவரும் எந்த திரைப்படங்களாக இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று விடும். ஆனால் சில திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்துவிடும்.
இந்நிலையில் விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் ஜார்ஜியாவின் படப்பிடிப்புகள் முடிந்து சென்னை திரும்பினார் விஜய்.
இந்நிலையில் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வரும் சமந்தாவின் பிறந்தநாள். சமந்தா தனது நடிப்பு திறமைனாளும், அழகினாலும் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்தார். தற்பொழுது இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தாவின் பிறந்தநாளில் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 2014ஆம் ஆண்டு தளபதி விஜய் மற்றும் சமந்தா இவர்களின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் கத்தி.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சமந்தாவின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்கள். அவ்வப்போது சமந்தா கேக் வெட்டும் பொழுது விஜய் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.