தன்னுடைய அழகினாலும் திறமையான நடிப்பினாலும் டோலிவுட், கோலிவுட் எங்கிலும் மிகப் பிரபலமான நடிகைதான் “சமந்தா”. தமிழ் சினிமாவில் முதன்முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா என்னும் படத்தில் தான் அறிமுகமானார்.
அதன் பிறகு பானாகாத்தாடி மற்றும் கத்தி படத்தின் மூலம் பெரும்பான்மையான மக்களால் அறியப்பட்ட ஒரு நடிகை தான் இவர், தற்பொழுது இவருக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது, இருடைய தற்போது சம்பளம் பல கோடிகள், இவர் நாகா அர்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவை திருமணம் செய்து தற்போது சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டார்.
அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்தார் அதில் புஷ்பா திரைப்படத்தில் “ஊ சொல்றியா மாமா” பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி ஒரு இடத்தைப் பிடித்தவர் சமந்தா.தற்பொழுது தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த “காத்துவாக்குல 2 காதல்” என்னும் திரைப்படம் சமந்தாவின் பிறந்தநாளான 28 ஏப்ரல் அன்று,அதாவது நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமந்தாவின் பிறந்தநாளும் நன்றாக கொண்டாடப்பட்டது.
சினிமா சூட்டிங் போல் ஏற்பாடு செய்து சமந்தாவை ஏமாற்றி அங்கு விஜய் தேவர்கொண்டா அவரது பிறந்தநாளில் சமந்தாவை சர்ப்ரைஸ் செய்தார். அந்த தருணங்களில் எமோஷனலான சமந்தா கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும் இவர் நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புது படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
இதைதொடர்ந்து விஜய் தேவர் கொண்டாவுடன் தெலுங்கில் ஒரு படம் நடிக்க போவதாக அறிவித்துள்ளார் சமந்தா, இந்த படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் தயாரிக்கப்படவுள்ளது, இந்தப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்காக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.