இரவு பார்ட்டியில் நடிகை சமந்தா..! இரண்டு முக்கிய பிரபலங்களுடன் சேர்ந்து செல்ஃபி புகைப்படம்.!

samantha
samantha

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது பல பட வாய்ப்பை கைப்பற்றி பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்திருந்தார்.

இந்த படத்தில் அவர் நடித்த கதீஜா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா பிரபல நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் என்ஜாய் செய்து வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

பின்பு ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்த நிலையில் அதன் பிறகு சமந்தா கமிட்டாகும் படங்களில் ஓவர் கிளாமர் காட்டி நடித்து வருகிறார். மேலும் சமந்தா தற்போது கலந்து கொள்ளும் சில பொது நிகழ்ச்சிகளுக்கு கூட கிளாமர் உடையில் தான் வலம் வருகிறார். அண்மையில் கரண் ஜோகர் தொகுத்து வழங்கிய காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு கூட சமந்தா படும் கிளாமராக வந்து கலந்து கொண்டார்.

அப்போது கரண் சமந்தாவிடம் பல சுவாரஸ்ய தகவல்களை கேட்க சமந்தா பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் சமந்தா ரசிகர்களை கவரும் வகையில் புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். மேலும் சமந்தா அவரது நண்பர்களுடன் பார்ட்டியில் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளிவரும்.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன் தனது தோழி காஜல் அகர்வால் மற்றும் தமன்னா இருவருடன் இணைந்து இரவு பார்ட்டியில் சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளங்களில் சமந்தாவின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

samantha
samantha