சமந்தா மற்றும் விஜய்தேவரகொண்டா நடித்து வரும் குஷி திரைப்படத்தில் விபத்தா.! சமந்தாவிற்கு என்ன ஆனது படக்குழுவினர்கள் விளக்கம்.

samantha-vijay-thevarkonda-2
samantha-vijay-thevarkonda-2

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக இருக்கும் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தை இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கிவருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சில நாள்களுக்கு முன்பே வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குஷி திரைப்படம் முழுக்க முழுக்க வண்ணமயமான காதல் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

’குஷி’ தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேன் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. சமந்தா விஜய் தேவர்கொண்டா உடன் ஜெயராம், சச்சின், கெடகர், முரளி சர்மா, லட்சுமி, அலி ரோஹினி, ராகுல், வெண்ணிலா, கிஷோர், ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா, ஆகியோர்கள் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் சில திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புஷ்பா திரைப்படத்தின் தயாரிப்பாளர் மைத்திரி மூவர் நிறுவனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது நேற்று முதற்கட்ட படப்பிடிப்பு நிறைந்ததாகவும் படக்குழுவினர் அறிவித்தது. அதில் பிடிஎஸ் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து குஷி திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து குஷி படத்துக்காக படப்பிடிப்பின்போது காஷ்மீரில் விபத்து ஒன்று தோன்றியதாகவும் அதில் விஜய் தேவர்கொண்டா விற்க்கும் சமந்தாவிற்க்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் பரவி வருகிறது. இந்த தவறான செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக உள்ளது. அதை படக்குழுவினர்கள் மறுத்ததாகவும் பேசப்படும்போது படக்குழுவின் இயக்குனர் ட்விட்டரில் இது எல்லாம் தவறான செய்தி என்று மறுத்துள்ளார். தவறான வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் இதையெல்லாம் நம்ப வேண்டாம் என்று கூறுகிறார்.

எனவே படத்தை பற்றிய சம்பந்தமான செய்தியை தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில் குஷி திரைப்படத்தின் போது விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. அது உண்மையில்லை படப்பிடிப்பு காஷ்மீரில் 30 நாட்களாக படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். இது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். என்று வெளியிட்டதால் உண்மையான நிலவரம் தெரிய வந்தது மேலும் குஷி திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.