தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், அழகினாலும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் அதர்வா முரளி நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து விஜய்,விக்ரம் என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளாறோ அதே அளவிற்கு சமீப காலங்களாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மற்ற மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் தெலுங்கில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு சில வருடங்கள் கழித்து மீண்டும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவரும் சமந்தா அளவிற்கு சினிமாவில் வளர்ந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த 7 நாட்களாக எந்த நடிகைகள் தேடப்பட்டவர் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை பூஜா ஹெக்டே 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ரன்னர் அப் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேடலில் அஞ்சான், நான் ஈ படத்தின் இளைஞர்களின் ஃபேவரிட் நடிகை சமந்தா இடம் பெற்றுள்ளது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.
இவ்வாறு ரசிகர்கள் மற்றும் சமந்தாவை தேடுவதற்கு காரணம் சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்த தி இரண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதனால் சமந்தாவை ரசிகர்கள் அதிகளவில் தேடி உள்ளார்கள் இதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே தளபதிவுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருவதால் இவரையும் ரசிகர்கள் அதிகளவில் தேடி உள்ளார்கள்.