தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது தெலுங்கு, ஹிந்தி என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவை பற்றிய ஏராளமான கிசுகிசுக்கள் இணையதளத்தில் வெளியாகி வரும் நிலையில் விவாகரத்திற்க்கு பிறகு நடிகை சமந்தா பல கோடி சொத்து வைத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆம், நடிகை சமந்தா ஒரு ஆண்டிற்கு 3 கோடி முதல் 6 கோடி வரை சம்பாதிக்கிறார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணமாகி நான்கு வருடங்கள் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்டார்கள்.
விவாகரத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முன்பெல்லாம் ஃபேமிலி பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கவர்ச்சி நடிகையாக நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்துள்ள காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் கிளாமராக நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு முன்பு புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா பாடலிலும் நடனம் ஆடி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்சில் சொகுசு பங்களா ஒன்றும், சென்னையில் ஒரு வீடும் சமந்த வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து BMW 3 Series, BMW X5 and Jaguar XFR என மூன்று சொகுசு கார்கள் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறு நடிகை சமந்தா கடந்த 2010ம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வரும் சமந்தா ஒட்டுமொத்தமாக ரூபாய்80 கோடி சொத்து வைத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இவ்வாறு சமந்தா விரைவில் 100 கோடி சொத்துக்கு அதிபதியாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்னதான் நடிகைகள் சினிமாவில் வளர்ந்து வந்தாலும் நடிகர்களைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.