மாடர்ன் உடையில் விதவிதமாய் கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய சமந்தா – ஆச்சரியத்தில் டாப் நடிகைகள்.

samanatha
samanatha

தமிழ் சினிமாவில் ஹீரோயின்னாக என்ட்ரியாகி பின் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக விஸ்வரூபம் எடுத்தார் நடிகை சமந்தா. இவர் சினிமா உலகில் தனக்கு என்ன வருமோ அது போன்ற கதைகளையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார் அப்படித்தான் சொல்லவேண்டும் ஆரம்பத்தில் காதல் சென்டிமென்ட் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் வெகு விரைவிலேயே இளசுகளை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார்.

அதன் விளைவாக ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து தனது சினிமா பயணத்தை விரிவுபடுத்தினார். அதன் காரணமாக மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஆடையின் அளவு குறைத்துக் கொண்டு நடித்த சமந்தா மற்ற மொழிகளில் எடுத்தவுடனேயே கவர்ச்சியை காட்டி நடித்ததால் அசுர வளர்ச்சியை எட்டினார்.

அதிலும் தெலுங்கில் இவரது மார்க்கெட் விண்ணை தொட்ட இப்படி பயணித்துக் கொண்டிருந்தவர் ரசிகர்களே எதிர்பார்க்காத அளவிற்கு நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஒருவழியாக ரசிகர்களும் ஏற்றுக்கொண்டனர் சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த இவர்கள் திடீரென நான்கு வருடம் கழித்து முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஆரம்பத்தில் சோகத்துடன் காணப்பட்ட சமந்தா தனது எண்ணங்களை மாற்றிக் கொள்ள கோயில்களுக்கு பக்கம் தனது திசை திருப்பினார் ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்த சமந்தா சினிமாவில் நடிக்க ரெடியாக ஆயுதமாக்கி உள்ளார் ஏன் இப்பொழுது கூட தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் தெலுங்கில் சகுந்தலம், அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய என அசத்தி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ஹிந்தியிலும் தற்போது அடி எடுத்து வைக்க ரெடியாக இருக்கிறார் சமந்தா இதனால் அவரது பயணம் மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா விதவிதமான மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.