பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக மிகப்பிரமாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.
இவ்வாறு ஒளிபரப்பான இந்த மூன்றாவது சீசனில் தான் ஏகப்பட்ட காதல் கலவரங்கள் சண்டைகள் என பஞ்சாயத்துக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் வெவ்வேறு குணம் கொண்டவர்களாக இருந்ததன் காரணமாக நிகழ்ச்சி சரியான சூடு பிடித்தது.
இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாக்ஷி அகர்வால் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே காலா மற்றும் விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலத்தை பயன்படுத்தி தற்போது 3 படங்களில் கமிட்டாகி உள்ளாராம்.
இவ்வாறு அவர் நடிக்கப்போகும் திரைப்படத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியாகி உள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி அகர்வால் முதலில் கவினை காதலித்து வந்தார் ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவருக்கும் சண்டைகள் ஏற்பட்டன.
பின்னர் கவினுடன் ஒவ்வொரு போட்டியாளர்களாக சேர்த்து வைத்துப் பேச ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் கடைசியில் லாஸ்லியாவின் காதல் வலையில் விழுந்து விட்டார் என கூறப்பட்டது இவ்வாறு எது நடந்தாலும் பரவாயில்லை என சாக்ஷி தன்னுடைய தன்னம்பிக்கையை கைவிடாமல் தான் பிரபலம் ஆக வேண்டும் என முடிவு செய்துள்ளார்.அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை குறிவைத்து தாக்கி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார் இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.