சினிமாவில் தற்போது பயணித்து வரும் பெரும்பாலான நடிகைகள் முதலில் மாடலிங் துறையில் இருந்து வந்தவர்களே அந்த வகையில் மாடலிங் துறையில் தனது அழகு மற்றும் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி பின்பு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால்.
இப்படி குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு அறிமுகமானவர் சாக்ஷி. இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை சாக்ஷி அகர்வால் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக விளையாடியதை அடுத்து கிளாமரை காட்டி இளம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் என்பதில் மாற்றம் இல்லை. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் இவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் நடிகை சாக்ஷியும் தனது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை அள்ளி தெளித்து வருபவர்.
மேலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் இவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி மற்றும் சுந்தர்சியின் அரண்மனை 3 திரைப்படத்திலும் ஒரு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சாக்ஷி அகர்வால் பஹீரா, நான் கடவுள் இல்லை, புறவி, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சாக்ஷி அவரது இன்ஸ்டா பக்கத்தில் புடவையை விலக்கியபடி சோபாவில் சாய்ந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த கிளாமர் புகைப்படம்.