நடிகை சாக்ஷி அகர்வால் சினிமா ஆரம்ப காலகட்டத்தில் டாப் நடிகரின் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தனர். குறிப்பாக அஜித்தின் விசுவாசம் ரஜினியின் காலா ஆகிய படங்களில் இவர் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.
அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன சொல்லப்போனால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் தான் தற்போது சாக்ஷி அவர்களுக்கு அதிகமாக வந்த வண்ணமே இருக்கிறது. இவரது கையில் தற்போது குறுக்குவழி, பஹீரா, புறவி, தி நைட், ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் நான் காலேஜில் படித்து வரும்போது ஒருவருடன் காதலில் இருந்தேன். அதுவும் பெரிய அளவிலான காதல் கிடையாது பார்த்துக் கொள்வது மட்டும்தான்.
நான் அவரை பார்த்து பேசுவது மட்டும் தான் வேறு எதுவும் கிடையாது.போன் பண்ணுவார். அவர் ஃபோன் வருவதற்காகவே நான் தூங்காமல் காத்துக் கொண்டு இருப்பேன் என கூறினார். நான் லவ் பண்ணுவது எனது வீட்டிற்கு தெரியும் என்னை நம்பு கிறார்கள் அதற்கு ஏற்ற மாதிரி தான் ஒருவரிடம் நான் பழகுவேன்.
அதுவும் கொஞ்ச நாட்களிலேயே முடிந்துவிட்டது. இப்பொழுது மிகப்பெரிய கனவு என்ன என்றால் வருடத்திற்கு நிறைய படங்களில் நடிக்க வந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெறவேண்டும் தனது திறமையை காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார்.