டப்பிங் பணிகளை முடிக்க சாலையில் முட்டிக்கு மேல் கடந்த தண்ணியை பொருட்படுத்தாமல் வந்த நடிகை சாக்ஷி அகர்வால் – ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.

sakshi agarwal
sakshi agarwal

மாடல் அழகியாக இருந்து பின் சினிமாவுலகில் பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்து வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் ஆரம்பத்திலேயே அஜித், விஜய் போன்ற நடிகர்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இளம் வயதிலேயே சினிமா உலகில் வலம் வந்தாலும் போகப்போக சினிமா எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டு அயராது உழைத்து வருகிறார்.

குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் சமீபகாலமாக ஹீரோ என்ற அந்தஸ்தை பெற படத்தா பாடு பட்டார் அண்மையில் வெளியான அரண்மனை  மூன்றாம்பக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு நடிகையாக இவர் நடித்த ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சாக்ஷி அகர்வால் பல்வேறு திரைப்படங்களில் நடிக்கிறார்.

அந்த வகையில் நான் கடவுள் இல்லை, தி நைட் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன அதிலும் குறிப்பாக தி நைட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் டப்பிங் பணிகளை முடிக்க சாக்ஷி அகர்வால் அடாது மழையிலும் விடாமல் தனது வேலையில் மும்முரமாக இருகிறார்.

மழையையும் தாண்டி சாலையில் இருக்கும் தண்ணீரையும் பொருட் படுத்தாமல் நடந்து வந்து இவர் தனது சினிமா பணியினை முடித்துள்ளார் ஆம் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு அவர் திரும்பி சென்றுள்ளார். வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சினிமாவுலகில் வளரும் நடிகைகள் பலரும் இவ்வளவு ஆர்வத்துடன் இருந்தாலே போதும்.

அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பது அந்த வகையில் சாக்ஷி அகர்வால் அயராது உழைத்ததால் அவரது ரசிகர்கள் தற்போது உங்களுக்கான நேரம் அமைந்துவிட்டது நிச்சயம் நீங்கள் சினிமாவில் நல்லதொரு இடத்தைப் பிடிப்பார் என கூறி அவரை வாழ்த்தி வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sakshi agarwal
sakshi agarwal

sakshi agarwal