Actress Sakshi Agarwal: சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமீபத்தில் பிரபல தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நிலையில் அதில் ராஜா ராணி படத்தினால் நான் ஏமாந்து விட்டேன் என்று அவர் அளித்திருக்கும் பேட்டி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் சாக்ஷி அகர்வால். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் மாடலிங் மூலம் மீடியாவிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அட்லி இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் சொல்லும் அளவிற்கு இந்த படம் பிரபலத்தை பெற்று தரவில்லை. எனவே இதனைத் தொடர்ந்து ரஜினியின் காலா திரைப்படம் பிரபலத்தை பெற்று தந்தது. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அப்படி 3 திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சாக்ஷி அகர்வால் கூறியதாவது, ராஜா ராணி படம் வாய்ப்பு வரும் பொழுது நான் பெங்களூரில் இருந்தேன் அப்பொழுது தான் நான் மாடலிங் துறையில் கால் பதித்த நேரம். சென்னையில் இருந்து என்னுடைய காஸ்டிங் ஏஜென்சியை தொடர்ந்து கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள்.
அப்பொழுது ஆர்யா நான் ஹீரோ, அட்லீ இயக்குனர் இந்த படத்தின் இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான அழைப்பு என்று சொன்னார்கள். தயாரிப்பு பற்றி கூட எனக்கு அப்போது தெரியாது நான் இரண்டு நாட்கள் ஷூட்டிங் போனேன் அதுக்கு பிறகு அவர்களின் அழைப்புக்காக காத்திருந்தேன். ஆனால் பட சூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனாலும் நான் டேட்டுக்காக வெயிட் பண்ணிக் கொண்டே இருந்தேன் நான் இயக்குனர் கிட்ட பேசிட்டு போயிருக்கணும், அந்த தவறு எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அது எனக்கு ஒரு நல்ல படம் அதைப்பற்றி நான் பெரிதாக பேச விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.