முதன்முறையாக தன்னுடைய மகளுடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட சாயிஷா.! வைரலாகும் வீடியோ

நடிகர் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா தனது மகளுடன் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 42 வயதாகும் நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு வனங்கான் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த நட்சத்திர ஜோடிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு அரியானா என பெயர் வைத்தனர். இந்நிலையில் அடிக்கடி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சாயிஷா வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆர்யாவின் திருமணத்திற்கு பிறகு சாயிஷா படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் பத்து தல  படத்தில் இடம்பெற்று இருந்த ஒரு பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடி இருந்தார் இதனால் பல விமர்சனங்களை சந்தித்தார் இருந்தாலும் இவருக்கு நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் இருந்து வருவதனால் தொடர்ந்து நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அப்படி இவருக்கு பலவகையான நடனங்கள் தெரியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவ்வாறு விமர்சனங்களை சந்தித்தாலும் பத்து தல படத்தில் இடம்பெற்று இருந்த ராவடி பாடலுக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது இந்த பாடலில் கௌதம் கார்த்தி உடன் இணைந்து ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் செம குத்தாட்டம் போட்டிருந்தார்.

இவ்வாறு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சாயிஷா தொடர்ந்து தனது நடன வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது 2 வயதே ஆகும் தனது செல்லக்குட்டி அரியானாவுடன் தற்பொழுது நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் சாயிஷா போல நடனமாடுவன பாத்தா ஆர்யா போல ஆடுற என கிண்டல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..