பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இந்த திரைப்படத்தில் இவர் மலர் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார்.இவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யா உடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான சாரங்கதரியா என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகை சாய் பல்லவி ராணா டகுபதியுடன் இணைந்து விராட பருவம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அதாவது இந்த திரைப்படத்தின் கதையானது காதலி, காதலனை தேடி காட்டுக்குள் தனியாக செல்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது அப்போது அங்கு உள்ள நபர்கள் சாய் பல்லவி இடம் தவறாக நடந்து கொள்வது போல டீசர் வெளியாகியுள்ளது. காதலனைத் தேடி செல்லும் இடத்தில் காதலி படும் கஷ்டத்தை பற்றி இந்த திரைப்படம் சொல்ல உள்ளது.
இந்த நிலையில் சாய் பல்லவியிடம் காட்டில் சிலர் தவறாக நடந்து கொள்ளும் காட்சி டிசரில் வெளியாகியுள்ளதால் ரசிகர்களிடையே இந்த படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை பிரியாமணியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதோ அந்த டீசர் வீடியோ.