ஏஞ்சல் சாய்பல்லவியின் ஒரே ஒரு மெசேஜினால் உற்சாகம் அடைந்த இயக்குனர்!!

saipalalvi-halitha
saipalalvi-halitha

Actress Saipallavi tweet to director: நடிகை சாய் பல்லவி பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ்டன் இணைந்து மாரி 2 என்னும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் இருந்து வெளியான ரவுடி பேபி என்ற பாடலின் மூலம் உலகெங்கும் கொடிகட்டி பறந்தார். மேலும் இவர் சூர்யாவுடன் இணைந்து என் ஜி கே என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் ஹலிதா ஷமீம் என்பவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பூவரசன் பீப்பி, இந்தத் திரைப்படம் இயக்கி ஐந்து வருடங்களுக்குப் பிறகு சில்லு கருப்பட்டி என்ற திரைப்படத்தை இயக்கினார். மேலும் தற்போது ஏலே என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். பெண் இயக்குனரான ஹலிதா சமீம், புஷ்கர் காயத்ரி மற்றும் மிஷ்கினுடன் துணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கிய இந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தை சாய் பல்லவி அவர்கள் தனது குடும்பத்துடன் பார்த்துவிட்டு அழுது விட்டாராம். இத்திரைப்படத்தில் நான்கு விதமான காதல் கதைகளை படமாக எடுத்து இருக்கிறார்களாம். சாய்பல்லவி அவர்கள் இயக்குனருக்கு ட்விட்டரில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மெசேஜில் நானும் என் குடும்பத்தாரும் இந்த திரைப்படத்தை பார்த்து மனதளவில் நெகிழ்ந்து விட்டோம். இதுபோன்று மேலும் நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது முழுமையான அன்பையும் பிரார்த்தனையும் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார். தற்போது அந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.