சினிமாவில் இருக்கும் நடிகைகள் என்றாலே சமூகத்தில் தவறான அபிப்பிராயம் உள்ளது. அதில் குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் என்றால் அவர்களுக்கு எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் இல்லை. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என அனைவருமே அவர்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்த்து வருகின்றனர்.
மேலும் இது அவர்களின் வேலை என்பதை மறந்து ரசிகர்களும் அப்படியே இருப்பார்கள் என நினைத்துக் கொள்கின்றனர். இப்படி நினைத்துக் கொண்டு அவர்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் நடிகை நீபா சினிமாவில் அறிமுகமாகும் போது கவர்ச்சி நடிகையாக அறிமுகமானார். அதற்கு காரணம் எப்படியாவது சினிமாவில் இவர் தன்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதும் அதுமட்டுமல்லாமல் தந்தையின் உடல்நிலையும் ஒரு காரணம் எனக் கூறியுள்ளார்.
மேலும் இவர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப் படத்தில் வடிவேலுக்கு கிடைத்த அளவிற்கு இவருக்கும் வரவேற்பு கிடைத்தது. இந்த திரைபடத்தில் நடிக்கும் போது நடிகர் வடிவேலு தான் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்ததால் தான் ரசிகர்களுக்கு நல்ல அபிப்ராயம் கிடைத்தது என கூறியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு பின்னர் அவர் எங்க போனாலும் நல்ல மரியாதை கிடைத்ததாகவும் அதற்குப்பின் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியுள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.