நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர். இந்த படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டார் அதன் பிறகு நடிகை சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வந்தது.
நடிகை சாய் பல்லவியும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார். பின்பு ஒரு கட்டத்தில் தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். இதை தொடர்ந்து தியா, என் ஜி கே போன்ற சில படங்களில் நடித்து வந்த..
நடிகை சாய் பல்லவிக்கு தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனை கருத்தில் கொண்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இப்படி இருக்கையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிதாக உருவாக உள்ள ஒரு படத்தில் ஹீரோயின்னாக நடிகை சாய் பல்லவி நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. இந்த நிலையில் சாய்பல்லவி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடன திறமையை வெளிப்படுத்தி வந்தவர்.
அப்போதே நடிகை சாய் பல்லவி சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர். அப்படி நடிகை சாய் பல்லவி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.