“இயக்குனர் மணிரத்தினம்” படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நடிகை சாய் பல்லவி – எந்த படம் தெரியுமா.?

saipallavi-
saipallavi-

நடிகை சாய் பல்லவி தெலுங்கு, மலையாள மொழி படங்கள் மூலம் அறிமுகமானவர். அதிலும் குறிப்பாக மலையாளத்தில் இவர் நடித்து வெளிவந்த பிரேமம் திரைப்படம்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து காணப்பட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருமாறியுள்ளார். பின்பு நடிகை சாய் பல்லவி ஒரு கட்டத்தில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து என் ஜி கே படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து தமிழில் அதிகம் படங்களில் கமிட் ஆகி நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தெலுங்கு பக்கமே திரும்பி அங்கு முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார். அண்மையில் சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்த கார்க்கி திரைப்படம்.

மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவரது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து உள்ளார். இந்த நிலையில் சாய் பல்லவிக்கு வந்த ஒரு முக்கிய பட வாய்ப்பு தவற விட்டுள்ள தகவல் குறித்து வெளியாகி வந்துள்ளது. ஆம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி ராவ், ஆர் ஜே பாலாஜி போன்றவர்கள் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காற்று வெளியிடை.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இயக்குனர் மணிரத்தினம் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் மணிரத்தினம் சாய்பல்லவியை தான் தேர்வு செய்தாராம். அப்போது சாய் பல்லவி நடிக்க முடியாத காரணத்தினால் அந்த வாய்ப்பு பின்பு அதிதி ராவுக்கு சென்றுள்ளது.