நடிகை சாய் பல்லவி நடித்த “கார்கி” படத்தின் இரண்டு நாள் வசூல் – எவ்வளவு தெரியுமா.?

saipallavi
saipallavi

நடிகை சாய் பல்லவி பிறந்தது வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் தான் ஆனால் சினிமா வாய்ப்பு கிடைத்தது என்னவோ மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக இவர் நடித்து என்ட்ரி கொடுத்தார்.

முதல் படமே வெற்றி படமாக சாய் பல்லவிக்கு அமைந்ததால் இந்திய அளவில் பேசப்பட்டார்.மேலும் தென்னிந்தியா முழுவதும் இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிய தொடங்கியது தமிழில் கூட நடிகை சாய் பல்லவி மாரி 2, என் ஜி கே போன்ற படங்களில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி படலெடுத்ததால் சாய் பல்லவிக்கு..

நாளுக்கு நாள் வாய்ப்புகள் அதிகரிக்கிறது மேலும் ரசிகர்களும் இவருக்கு ஏராளமாக உள்ளனர் குறிப்பாக தமிழ், தெலுங்கு போன்ற மொழி பக்கம் இவருக்கு  அதிக ரசிகர்கள் உள்ளனர். அதற்கு ஏற்றார் போல பட வாய்ப்புகளும் அதிகமாக குவிந்த வண்ணமே இருக்கிறது தெலுங்கில் இவர் கடைசியாக நடித்த விராட பருவம் படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்.

அதனை தொடர்ந்து இப்பொழுது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தயாரான திரைப்படம் கார்கி இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி  நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி தற்பொழுது நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இதில் சாய் பல்லவியின் நடிப்பும் பாராட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 15ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரையிலுமே  நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது இரண்டு நாள் முடிவில் மட்டும் சுமார் 2.5 கோடி வசூல் செய்திருக்கிறதாம். வருகின்ற நாட்களிலும் கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.