மலையாள திரை உலகில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை சாய் பல்லவி. இத்திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்த மூன்று திரை உலகிலும் மாற்றி மாற்றி நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் தமிழில் தியா, மாறி 2 உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை.
இதனைத் தொடர்ந்து பாவகதைகள் அந்தாலஜியில் நடித்திருந்தார். இவர் தற்போது பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் தான் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் மூன்று திரைப்படங்களில் தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது சாய்பல்லவி இந்தியிலும் அறிமுகமாக உள்ளார். இவர் நடிக்க உள்ள இத்திரைப்படத்தை தெலுங்கில் முக்கிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் விவி விநாயக் இயக்கவுள்ளார். இவர்தான் சாய்பல்லவிடம்யி கதை கூறி வருகிறார் ஆனால் இதனைப் பற்றி சாய்பல்லவி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
சாய்பல்லவி ஹிந்தியில் நடித்தால் அத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்க உள்ளார். இந்த நடிகரின் தந்தை பிரபல இயக்குனரான பெல்லம்கொண்ட சுரெஷ். இவர் தயாரிப்பாளர் என்பதால் இவர் தயாரித்து வரும் பல படங்களில் தனது மகனை தான் படிக்க வைத்து வருகிறார்.
அந்த வகையில் இவர் தயாரிக்க உள்ள தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இத்திரைப்படத்தை பெல்லம்கொண்ட சுரேஷ் தான் தயாரிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீனிவாஸ் தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.