மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் சாய்பல்லவியின் புதிய திரைப்படம்.! வெளியான கிலிப்ஸ் வீடியோ..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பின் மூலம் கவர்ந்து தற்போது உள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி.  இவர் மலர் டீச்சராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தமிழ் தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கில்  விரட்ட பருவம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ்சாக உள்ளது. இவர் முதன்முறையாக மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவருக்கு தமிழ், தெலுங்கு,மலையாளம் என மூன்று திரைவுலகிலும் மாறிமாறி நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தியா, தனுஷுடன் இணைந்து மாரி 2,  சூர்யாவுடன் NGK உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் மேலும் இவர் நடிப்பில் கன்னடம், தெலுங்கு, தமிழ் என மூன்று திரைவுலகிலும் கார்க்கி திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கவுள்ள இத்திரைப்படத்தை பிலாக்கி ஜெனி, மை லைஃப்ட் பியூட் ப்ரமோஷன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.

இவ்வாறு மூன்று திரைவுலகிலும் அறிமுகமாக உள்ள இத்திரைப்படத்தில் டப்பிங்கையும் சாய்பல்லவி தன் சொந்தக்குரலில் பேசிவுள்ளார். இவ்வாறு விரைவில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் கிளிப்ஸ்  வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.