தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இவர் யார் உங்களில் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தான் தனது கெரியரை தொடங்கினார்.
பிறகு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் தமிழில் வெளிவந்த கஸ்தூரி மான் என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்மூலம் இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கு என்று திரைப்படங்களில் மாறிமாறி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இவர் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.
இது ஒருபுறம் இருந்தாலும் சாய்பல்லவியும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது கேரள மணப்பெண் போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு திருமணமா என்று அதிர்ச்சி அடைந்தார்கள். பிறகு தான் தெரிந்தது இது போட்டோ ஷூட்காக எடுத்த புகைப்படம் என்று, இதோ அந்த புகைப்படம்.