மலையாளத் திரையுலகில் நடிக்க ஆரம்பித்து தற்போது தமிழிலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. தற்பொழுது உள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இவர் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படத்தில் மலர் டீச்சராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தால் இரண்டாவது திரைப்படம் முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணைந்து கேஜிஎஃப் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் கலவை விமர்சனத்தைப் பெற்றது எனவே இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை பார்த்துவிட்டு ஏன் இந்த திரைப்படத்தில் நடித்தேன் என்று கவலைப்படுகிறேன் என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கிய லவ் ஸ்டோரி மற்றும் நானிவுடன் சியாம் சிங்க ராய் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் தங்கையாக நடிப்பதற்கு போலோ சங்கர் என்ற பட வாய்ப்பு கிடைத்தது ஆனால் இதனை வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்.
பிறகு தற்பொழுது எந்த திரைப்படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சாய்பல்லவி அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமா ரசிகர் மத்தியில் நல்லதொரு இமேஜை இருந்து வருகிறது, எனவே அதனை நான் கெடுக்க விரும்பவில்லை, எனவே திருப்தியான கதாபாத்திரத்தில் மட்டுமே இதற்கு மேல் நடிப்பேன் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.எனவே அந்த நம்பிக்கையை நான் வீணாக்க விரும்பவில்லை நல்ல கதையாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் எனவே அதற்காகத்தான் காத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
டோலிவுட்டில் சாய்பல்லவி திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் இதன் காரணமாகத்தான் புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார் என்ற தகவல் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை விரைவில் இதனைப்பற்றி சாய் பல்லவி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.