actress sai pallavi latest dance video: தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான நடிகையாக கருதப்படுவதால் நடிகை சாய் பல்லவி. இவர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறனை வெளிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு மருத்துவர் என்ற முறையில் இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். பொதுவாக நடிகை சாய் பல்லவிக்கு மருத்துவ தொழிலில் உள்ள ஆர்வத்தை விட சினிமாவில் தான் அதிக ஆர்வம் உள்ளதாம் ஆகையால்தான் மருத்துவ தொழிலை விட்டுவிட்டு சினிமாவில் நிரந்தரமாக இறங்கிவிட்டார்.
மேலும் தன்னுடைய நடன திறனை உங்களில் யார் பிரபுதேவா என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய நடனத்தினை வெளி காட்டினார். அதன் பிறகு நடிகை சாய் பல்லவி க்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டது இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இவர் மலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றியை கண்டது. இதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு காளி என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். தற்போது சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார் இந்த திரைப்படத்தில் உள்ள ரவுடிபேபி எனும் பாடலை மிக அழகாக நடனமாடி சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நமது நடிகை சாய் பல்லவி மிக கவர்ச்சியான உடையில் நடனமாடி தாறு மாறாக வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.